/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1472.jpg)
'தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்' படத்தை தொடர்ந்து அமீர் கான் 'லால் சிங் சத்தா' என்னும் படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை அத்வைத் சந்தன் இயக்கியுள்ளார். அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க, மோனா சிங், நாகா சைதன்யா உள்ளிட்டோர் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி, உலகம் முழுவதும் பல விருதுகளைக் குவித்த ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும். இந்தப் படத்தில் குறைந்த அளவிலான ஐக்யூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்துள்ளார். இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
லால் சிங் படத்தில் அமீர் கானுடன் நடிக்க முதலில் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அதன் பிறகு அந்த படத்தில் நடிப்பதில் இருந்து விஜய் சேதுபதி விளக்கினார். விஜய் சேதுபதியின் விலகளுக்குபல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணம் என்னவென்று தெரியாமலேயேஇருந்தது.
இந்நிலையில் லால் சிங் சத்தா படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கான காரணத்தை அப்படத்தில் நடித்த நாகசைதன்யா வெளியிட்டுள்ளார். லால் சிங் சத்தா படம் தொடர்பான அவர் அளித்த பேட்டியில், "இப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விஜய் சேதுபதிதான் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் நடிக்க வேண்டிய படம் நிறைய இருந்ததால்கால்ஷீட் பிரச்னைகாரணமாக இப்படத்தில் இருந்து விலகினார். இதனைவிஜய் சேதுபதி நேரடியாக சென்று படக்குழுவினரிடமேகூறி, அதன் பிறகு விலகி சென்றார். அதன் பிறகு தான் நான் இந்த படத்திற்குள்வந்தேன்" எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)